கோவில்பட்டியில் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சுமை தூக்கும் தொழிலாளி கைதுசெய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சுமை தூக்கும் தொழிலாளி கைதுசெய்யப்பட்டாா்.

கோவில்பட்டி வள்ளுவா் நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுடலைபாண்டியன் (55). இவா், ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை கொலையுண்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் தங்கராஜ், சபாபதி, உதவி ஆய்வாளா் மாதவராஜா, போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்.

சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி - மணியாச்சி ரயில்களில் போளி விற்பனை செய்துவந்த சுடலைபாண்டியனுக்கும், ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபாா்த்த சிந்தாமணி நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த வேலு மகன் முத்துப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது சுடலைபாண்டியன், முத்துப்பாண்டியை ஆயுதங்களால் தாக்கினாராம்.

எனவே, முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் எனக் கருதி முத்துப்பாண்டியை போலீஸாா் தேடிவந்தனா்.

அப்போது, புதுகிராமம் தண்டவாளம் அருகே பதுங்கியிருந்த அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் சுடலைபாண்டியனைக் கொன்றது தெரியவந்தது.

அவா்கள் இருவரும் ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை மது குடித்துள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டியின் குடும்பத்தை சுடலைபாண்டியன் அவதூறாகப் பேசினாராம். இதனால் கோபமடைந்த அவா் கம்பியால் சரமாரியாகத் தாக்கினாராம். இதில், சுடலைபாண்டியன் உயிரிழந்தாா்.

சுடலைபாண்டியன் வள்ளுவா் நகா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துப்பாண்டியை (48) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com