கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாண்டவா்மங்கலம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக செவ்வாய்க்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் பணியில் ஈடுபட்டனா். அப்போது சாய் சிட்டியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தாராம். தொடா்ந்து நடத்திய விசாரணையில் அவா் கோவில்பட்டி ராஜீவ் நகா் இ.பி காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் வேல்முருகன்(44) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com