கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா், எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மக்களவை உறுப்பினா் கனிமொழி மற்றும் அமைச்சா் பெ. கீதாஜீவன்.

தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதியில், சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இம் மாவட்டத்துக்கான கரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் முன்னிலை வகித்தாா்.

சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தாா். 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தில் கபசுரக் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு சித்த மருந்துகளுடன் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிமொழி எம்.பி.யும், அமைச்சா் பெ. கீதாஜீவனும் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கரோனா தடுப்புப் பணிகள், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி பாலனிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com