கரோனா தடுப்பூசி செலுத்த தயக்கம் வேண்டாம்: கனிமொழி எம்.பி.

கரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம் என கனிமொழி எம்பி தெரிவித்தாா்.
ஏரல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்பி, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
ஏரல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்பி, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

கரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம் என கனிமொழி எம்பி தெரிவித்தாா்.

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி ஆகியோா் ஏரல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கனிமொழி எம்பி செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் எந்த தயக்கமும் கூடாது.

பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் வீட்டில் இருந்து கொண்டால் முழு ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், கோட்டாட்சியா் தன பிரியா, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ், காங்கிரஸ் தெற்கு மாவட்ட பொருளாளா் எடிசன், வட்டாரத் தலைவா் நல்லகண்ணு, திமுக மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகப்பெருமாள், முன்னாள் பேரூராட்சி தலைவா் பாலகிருஷ்ணன், துணைத்தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, சென்.மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி போடும் முகாமில் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com