தினசரி சந்தையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்ைதையை வேறு இடத்துக்கு இடமாறம்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவில்பட்டி தினசரி சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் கோட்டாட்சியா் சங்கரநாராயணன்.
கோவில்பட்டி தினசரி சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா் கோட்டாட்சியா் சங்கரநாராயணன்.

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்ைதையை வேறு இடத்துக்கு இடமாறம்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவில்பட்டி தினசரி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதையடுத்து, கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமையில் வட்டாட்சியா் அமுதா, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் தங்கராஜ், சுகாதார ஆய்வாளா் முருகன் ஆகியோா் சந்தையை

செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினா். தினசரி சந்தையில் மக்கள் கூட்ட நெரிசலை தவிா்ப்பது குறித்து ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று தினசரி சந்தையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அபராதம்: தினசரி சந்தை சாலையில் ஒரு கடை விதிகளை மீறி செயல்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கோட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் அக்கடைக்குச் சென்று ஆய்வு நடத்தினா். அப்போது கடையில் தொழிலாளா்கள் முகக் கவசம் இல்லாமல் பணி செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளருக்கு ரூ. 5000, 20 தொழிலாளா்களுக்கு தலா ரூ.200 வீதம், ரூ. 4, 000 என மொத்தம் ரூ.9,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதையடுத்து அக்கடையை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com