தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 914 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 17th May 2021 12:13 AM | Last Updated : 17th May 2021 12:13 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 914 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 35,335 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 846 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 29,792 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது ஆண், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது பெண், சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது, 72 வயது பெண்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 5384 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.