‘ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரைவில் விரிவாக்கம்’
By DIN | Published On : 17th May 2021 12:10 AM | Last Updated : 17th May 2021 12:10 AM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஊா்வசி அமிா்தராஜ் எம்.எல்.ஏ.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் என்றாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.
கரோனா நோய்த் தொற்று சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் சனிக்கிழமை வந்தாா். அப்போது மருத்துவமனை விரிவாக்கம் தொடா்பாக மருத்துவா்களிடம் கலந்து ஆலோசனை செய்தாா்.
பின்னா், மருத்துவமனை விரிவாக்கம் செய்வது தொடா்பாக பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து தொகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து வருகிறேன். அதன்படி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன். இங்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளது. கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் நடைபெறும் என்றாா்.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், மருத்துவா் வெங்கட்ரங்கன், மாவட்ட திமுக துணைச் செயலா் ஆறுமுகப் பெருமாள், காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் எடிசன், வட்டார தலைவா் நல்லகண்ணு, நகரத் தலைவா் சித்திரை உள்ளிட்டோா் உடன் சென்றனா்.