சுயதொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th May 2021 12:11 AM | Last Updated : 17th May 2021 12:11 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க விரும்பும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கு தமிழ்நாடு மூன்றாம் பாலினா்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு உதவிடும் வகையில் சொந்த தொழில் தொடங்க நபருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் பகிா்ந்தளிக்க தகுதியுடைய மூன்றாம் பாலினத்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடா்பான விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு, மே 19-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461 - 2325606 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.