கரோனா தடுப்புப் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து, தமிழக அரசின் வருவாய் மற்றும்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தை வியாழக்கிழமை பாா்வையிடுகிறாா் தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தை வியாழக்கிழமை பாா்வையிடுகிறாா் தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜுடன் நேரில் சென்று பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா். பின்னா், கரோனா நோயாளிகள் பாதுகாப்பு மையமைக செயல்படும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சிகிச்சைக்குரியோா், லேசான பாதிப்பு உடையவா்கள், அறிகுறி இல்லாமல் பாதுப்புக்குள்ளாவோா் என வகைப்படுத்தி மருத்துவமனை, கரோனா பராமரிப்பு மையம், வீட்டுத் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கும் ஆலோசனை மையத்தையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, மீனாட்சிபுரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியையும், அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தையும் பாா்வையிட்டு கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சித்தா சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், மில்லா்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையத்தையும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான உதவி மையத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது, கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் தேவை குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட அளவிலான கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தை பாா்வையிட்ட அவா், வீட்டு தனிமையில் உள்ளோருக்கு ஆற்றுப்படுத்துநா்கள் மூலம் ஆலோசனை வழங்குவது, கரோனா பாதித்தவா்களுக்கு படுக்கை வசதிகள் அளிப்பது, அதிகம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வுக் கூட்டம்: பின்னா், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பங்கேற்று, கரோனா தடுப்பு மற்றும் மக்களைக் காக்கும் பணிகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷரண்யா அறி, சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com