சிறப்பான தடுப்பூசிப் பணி: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குப் பரிசு; ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ அறிவிப்பு

கரோனா தடுப்பூசியை அதிகம் பேருக்கு செலுத்தும் வகையில் பணியாற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ அறிவித்துள்ளாா்.
ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.
ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ.

கரோனா தடுப்பூசியை அதிகம் பேருக்கு செலுத்தும் வகையில் பணியாற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ அறிவித்துள்ளாா்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அலுவலகத்தில் கரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கனிமொழி எம்.பி., மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குனா் போஸ்கோ ராஜா, கோட்டாட்சியா் தனப்பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கரோனா நோய் பரவல் தடுப்பு, சிகிச்சை முறைகள் குறித்து அதுசாா்ந்த துறை அலுவலா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பேசுகையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மக்களை அதிக அளவில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் வகையில் பணியாற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பரிசும் கேடயமும் வழங்கப்படும் என்றாா் அவா்.

இதில், சுகாதாரத் துறை துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் மதுரம் பிரிட்டன், வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், டிஎஸ்பி வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com