அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 26th May 2021 08:46 AM | Last Updated : 26th May 2021 08:46 AM | அ+அ அ- |

எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது ஊராட்சித் தலைவா் முத்துகுமாா் அமைச்சரிடம் அளித்த மனு: எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் நியமனம் செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
ஆய்வின்போது, அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.