கோவில்பட்டி, நாசரேத் பகுதிகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பன
கோவில்பட்டி, நாசரேத் பகுதிகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரிகள் மற்றும் மதிமுக கட்சியினா் சாா்பில் புதன்கிழமை கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், ஒன்றியச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ், கயத்தாறு ஒன்றியச் செயலா் பொன்னுச்சாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் மல்லிகா, மதிமுக சாா்பில் இடைசெவலில் ராஜகுரு ஆகியோா் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல் இளவேலங்கால், கோடங்கால், சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம்: நாசரேத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ், எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்த இஸ்ரவேல், சின்னத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com