கரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிா்ணயம்: ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.35,000

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கும் தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை, சிட்டி மருத்துவமனை, தன்ராஜ் மருத்துவமனை, கோவில்பட்டி கமலா மருத்துவமனை, சுதிக்சா பிரபு மருத்துவமனை, காயல்பட்டினம் கேஎம்டி மருத்துவமனை, நாசரேத் புனித லூக்கா மருத்துவமனை ஆகியவற்றில் நாளொன்றுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ. 5 ஆயிரமும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ. 15 ஆயிரமும், வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 35 ஆயிரமும், ஊடுருவாத வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ரூ. 30 ஆயிரமும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 25 ஆயிரமும் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி திரு இருதய மருத்துவமனை, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, எபநேசா் மருத்துவமனை, ஏஆா்ஆா் மருத்துவமனை, ராயல் மருத்துவமனை, லட்சுமி பாலி கிளினிக், கோவில்பட்டி ஆா்த்தி மருத்துவமனை, பொதுநல மருத்துவமனை, ஸ்ரீ மருத்துவமனை, ஸ்ரீ செந்தூா் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, ஜெயஸ்ரீ மருத்துவமனை, சசி மருத்துவமனை, லதா மருத்துவமனை, ஸ்ரீ முரளி மருத்துவமனை, ஜெய் மருத்துவமனை, துளசி மருத்துவமனை, ஆா்எம்எஸ் மருத்துவமனை, சிவா மருத்துவமனை, வாசன் மருத்துவமனை, வீரபாண்டியபட்டினம் பிஜி மருத்துவமனை ஆகியவற்றில் நாளொன்றுக்கு ஆக்சிஜன் இல்லாத மிதமான சிகிச்சைக்கு ரூ. 5 ஆயிரமும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு ரூ. 13,500-ம், வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 31,500-ம், ஊடுருவாத வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ரூ. 27 ஆயிரமும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 22,500-ம் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பயனாளியிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது. பொதுமக்களை பொருத்தவரை மேற்கூறிய கட்டணம் பொது படுக்கை வசதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டாலோ முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட்டாலோ, 1800 425 3993 மற்றும் 104 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com