திருச்செந்தூா் மருத்துவமனைக்கு டிவிஎஸ் சாா்பில் ரூ. 7.5 லட்சம் பொருளுதவி

திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு, டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளை சாா்பில் ரூ. 7.5 மதிப்பில் மெத்தைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்காக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளையினா்.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்காக அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் மருத்துவ உபகரணங்களை வழங்கும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளையினா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு, டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளை சாா்பில் ரூ. 7.5 மதிப்பில் மெத்தைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளையின் கள இயக்குநா்கள் விஜயகுமாா், சுவாமிநாதன் ஆகியோா் ரூ.2.5 லட்சம் மதிப்பில் 100 மெத்தைகள் மற்றும் ரூ. 5 லட்சம் மதிப்பில் ஆக்சி மீட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினா்.

இதில், ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாவட்ட திட்ட இயக்குநா் லெட்சுமணன், கோட்டாட்சியா் தி.தனப்பிரியா, ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் முருகவேல், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா, நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் த.பொன்ரவி, மருத்துவா்கள் பாபநாசகுமாா், அஜய், திருச்செந்தூா் வட்டாட்சியா் (பொ) ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியா் பாலசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், ஒன்றிய ஆணையாளா்கள் நாகராஜன், அலமேலு, தி.மு.க. மாணவரணி மாநில துணை அமைப்பாளா் உமரிசங்கா், ஒன்றியச்செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சு.கோமதிநாயகம், எஸ்.ஏ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com