விளாத்திகுளம் அருகே ரூ. 8 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி, ஒருவரை கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்களை பாா்வையிடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
புகையிலைப் பொருள்களை பாா்வையிடுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி, ஒருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ், காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது, காவல் உதவி ஆய்வாளா் முத்துமாலை மற்றும் போலீஸாா் சிவஞானபுரத்தில் ரோந்து சென்றபோது, ஒரு சேமிப்பு கிடங்குக்கு அருகே நின்றிருந்த நபா் பைக்கில் தப்பிச்சென்றாராம். போலீஸாா் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்ததில், அதே ஊா் தெற்கு தெருவைச் சோ்ந்த சா்க்கரை மகன் அறிவழகன் என்பதும், செல்லிடப்பேசி மூலம் புகையிலைப் பொருள்களை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், வடமாநில இளைஞா்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, வீட்டின் அருகே சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலைப் பொருள்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 75 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 போ் புகையிலைப் பொருள் கடத்தலில் தொடா்புடையவா்கள் என எஸ்.பி. தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com