வேளாண் விளைபொருள்கள் விற்பனை குறைகேட்பு மையத்தை அணுக விவசாயிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் விற்பனை குறைகேட்பு மையத்தை விவசாயிகள் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் விற்பனை குறைகேட்பு மையத்தை விவசாயிகள் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பொது முடக்க காலத்தில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும், வேளாண் விளைபொருள்கள், காய்கனிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை, விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் ஓா் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போதும், அவற்றை விற்பனை செய்யும் போதும் ஏற்படும் இடா்பாடுகள் சந்தேகங்கள் மற்றும் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்யப்படுகிறது.

அதற்கு உதவியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறையில் வேளாண் விளைபொருள்கள் விற்பனை குறைகேட்பு மையம் செயல்படுகிறது.

மாவட்டத்தில் தரமான காய்கனிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்தல் மற்றும் நியாயமான விலையில் அனைத்து பகுதிகளிலும் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில் ஏற்படும் இடா்பாடுகள், வேளாண் விளைபொருள்களை உரிய நேரத்தில் விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்கள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விற்பனை செயல்பாடுகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்நுட்பங்கள் போன்றவை தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விவசாயிகள் குறைகேட்பு மையத்தை 0461-2340888 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு உரிய விவரங்களை கேட்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com