தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேளதாளம் முழங்க மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசின் உத்தரவுப்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.  
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேளதாளம் முழங்க மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசின் உத்தரவுப்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 
நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 
பின்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர் தொடக்கப் பள்ளிகள் திறப்பு குறித்து, செப்டம்பர் 28 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


அதில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனாவால் சுமார் 600 நாட்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இன்று தொடங்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உற்சாகமுடன் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு மாணவ - மாணவிகள் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.


அந்த வகையில் தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேளதாளங்கள் முழங்க மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கியும் உடல் வெப்ப பரிசோதனை செய்தும், மலர்கள் கொடுத்தும் வரவேற்பளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளும் மிகவும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்ற தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி செய்தியாளரிடம் பேசிய போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 1872 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை தந்துள்ளனர். 


அனைத்து பள்ளிகளிலும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகஅரசின் வழிகாட்டுதல்படி பள்ளிகள் திறக்கப்பட்டு அதுபோல் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் படித்த தங்களின் குழந்தைகளை தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இருப்பதாக கேள்விப்பட்டு தற்போது இந்த பள்ளியில் சேர்த்து இருப்பதாகவும் 17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் தெரிவித்தனர். 

ஆர்வமுடன் வருகைதந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் முகப்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் கண்டறியும் வெப்பநிலைமானி மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு சானிடைசர் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின் பள்ளி இருக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் உட்கார வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com