குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்
குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்

திருச்செந்தூர்: குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்

திருச்செந்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

திருச்செந்தூர்:    திருச்செந்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

திருச்செந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வீரராகவபுரம் தெரு, தெற்குபுதுத்தெரு மற்றும் அங்குள்ள ஆசாரி குடியிருப்பு பகுதியில் வழக்கமாக கழிவு நீர் தேங்கிக்கிடக்கும். தற்போது மழைநீருடன் கலந்து கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை காலை கோயில் செல்லும் வழியில் அமலிநகர் சந்திப்பில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வட்டாட்சியர் சுவாமிநாதன், தாலுகா காவல் ஆய்வாளர் (பொ) கனகாபாய், வருவாய் ஆய்வாளர் மணிகண்ட வேல், கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) பாபு, சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார்  அரை மணி நேரம் நடந்த இப்போராட்டத்தினால் போக்குவரத்து தடைபட்டு கோயிலுக்கும் செல்லும் பக்தர்கள் பாதிப்படைந்தனர்.

தீர்வு கூட்டம் :

தொடர்ந்து கழிவு நீர் தேங்கியுள்ள பகுதியினை வட்டாட்சியர் சுவாமிநாதன் பார்வையிட்டு, அப்பகுதி மக்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரை அழைத்து கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் இன்னும் இரு தினங்களில் பேரூராட்சி பொறியாளர் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து, பணிகள் நடைபெற்று விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com