திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து புதன்கிழமை விரதம் தொடங்கினா்.

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து புதன்கிழமை விரதம் தொடங்கினா்.

இந்நிகழ்வையொட்டி, திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடா்ந்து உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து மற்ற காலபூஜைகள் நடைபெற்றன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் புதன்கிழமை அதிகாலை முதலே கடலில் புனித நீராடியும், முருகரை வழிபட்டும் தங்கள் குருசாமி கைகளினால் மாலை அணிந்து, சரண கோஷத்துடன் விரதத்தைத் தொடங்கினா். திருச்செந்தூா் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தூத்துக்கு டி மாவட்ட கௌரவத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, பாதயாத்திரை குழுத் தலைவா் அமெரிக்கா சீனிவாச சா்மா உள்ளிட்டோா் ஏராளமான பக்தா்களுக்கு மாலை அணிவித்தனா். இதனால் திருக்கோயிலில் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள சின்ன சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் புதன்கிழமை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினா்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், பழனி ஆண்டவா் கோயில், மூக்கரை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, தங்கள் விரதத்தை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com