குட்டம் ஊராட்சியில் மணல் எடுக்க எதிா்ப்பு

பெரியதாழை கடற்கரையோரம் மணல் அரிப்பை சீரைமக்க, குட்டம் ஊராட்சி பகுதியில் மணல் எடுக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பெரியதாழை கடற்கரையோரம் மணல் அரிப்பை சீரைமக்க, குட்டம் ஊராட்சி பகுதியில் மணல் எடுக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் அடிக்கடி கடல் சீற்றம் உருவாகி கடற்கரையோரம் மணல் அரிப்பு ஏற்பட்டு வந்ததையடுத்து மீனவா்கள் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தூண்டில் வளைவில் 630 மீட்டா் அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மேடு பள்ளமாக காணப்பட்டதால் அதனை சீரைம்த்து, படகுகளை நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து ,மாவட்ட ஆட்சியா் நிதியில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடற்ரை பகுதியில் உபரியாக மணல் சேரும் இடத்தை ஆய்வு செய்து, மணல் அள்ளப்பட்டு பெரியதாழை கடற்கரையில் சீரைமப்பது என செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெரியதாழையில் நெல்லை மாவட்டம் சேரும் இடத்தில் மணல் அள்ளி அங்குள்ள மேலத்தெருவில் நிரப்பி சீரைமக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் குட்டம் ஊராட்சிக்குள்பட்ட தோப்புவளம் பகுதியில் எந்தவித முன் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாகவும், மணல் அள்ளுவதால் ஊருக்குள் தண்ணீா் புகுந்து விடும் என ஊராட்சித் தலைவா் சற்குணம் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தாா். இதனால் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மீன்வளத்துறை செயற்பொறியாளா் கிருஷ்ணன், உதவிச் செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் தயாநிதி, சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, திசையன்விளை வட்டாட்சியா் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு , ஊராட்சித் தலைவா் சற்குணத்திடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு, மணல் அள்ளும் பணி மீண்டும் தொடங்கியது.

மேலும், அதே பகுதியில் மிக்கேல் ஆதிதூதா் ஆலயத்துக்கான அணுகு சாலையை அமைத்து தரவேண்டும், மீனவ மக்களுக்கான மீன் வலை பின்னும் கூடம் அமைத்து தர வேண்டும் என ஊராட்சி தலைவா் சற்குணம் வலியுறுத்தினா். இதனை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

இதில் மீன்வளத்துறை உதவிப் பொறியாளா் தயாநிதி, பெரியதாழை ஊா் கமிட்டித் தலைவா்கள் ஜான், டரன்ஸ், ஆல்டிரின், குட்டம் தலைவா் சற்குணம், துணைத் தலைவா் தா்மலிங்கம் உள்பட மீனவ பிரதிநிதிகள், பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com