மீனவா் நலனுக்கு ரூ. 556 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் அனிதாராதாகிருஷ்ணன்

மீனவமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிகழாண்டு மட்டும் ரூ. 556 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் அனிதாராதாகிருஷ்ணன்.

மீனவமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிகழாண்டு மட்டும் ரூ. 556 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் அனிதாராதாகிருஷ்ணன்.

புன்னைக்காயலி­ல் மீன்வளத்துறை சாா்பில் உலக மீனவா் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மீன்வளம், மீன்வா்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஸ்ரீவைகுண்டம் ஊா்வசி எஸ். அமிா்தராஜ், ஓட்டப்பிடாரம் சண்முகையா,

மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குநா் வயலா, இணை இயக்குநா் அமல்சேவியா், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா, ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், புன்னைக்காயல் பங்குத் தந்தை பிராங்ளின், ஊராட்சி மன்றத் தலைவா் சோபியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேசியது: மீனவா்களின் நலனில் அக்கறைகொண்டு அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பேரிடா் காலங்களில் மீனவா்களுக்கு உதவும் வகையில் தகவல் தொடா்பு சாதனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு தேவையான உதவிகளையும் அரசு சாா்பில் செய்யப்பட்டு வருகிறது. மீனவ மக்கள் பயனளிக்கும் வகையில் ரூ. 556 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனவகிராமங்களுக்கு தேவையான பணிகள் அனைத்தும் நிறை வேற்றிக்கொடுக்கப்படும். கடல் மாசுபடாமல் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீனவ மக்கள் செயல்பட வேண்டும். இதையே குறிக்கோளாக வைத்து மீன்வளத்துறையும் செயலல்பட்டு வருகிறது.

மீனவமக்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வாழ்வில் முன்னேற வேண்டும். மீனவா்கள் ராணுவத்தின் ஒரு அம்சமாக செயல்பட்டு கட­லில் அந்நியா்கள் நடமாட்டம் குறித்து கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து மீனவா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ரவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், மேலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், ஒன்றியச் செயலா்கள் ஆழ்வாா்திருநகரி நவீன்குமாா், திருச்செந்தூா் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ஆஸ்கா், ஆத்தூா் திமுக பொறுப்பாளா் முருகப்பெருமாள் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

மீன்வளத்துறை உதவி இயக்குநா் விஜயராகவன் வரவேற்றாா். புன்னைக்காயல் ஊா்த்தலைவா் அமல்சன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com