தூத்துக்குடி மாவட்டத்தில் 3.11 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டை ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3.11 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்டத்தில்  3.11 லட்சம் குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டை                                                            ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3.11 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் , ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட விழிப்புணா்வு வார விழாவில், 25 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டையை வழங்கி அவா் மேலும் பேசியது: முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் 2018 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டமும் இணைந்து ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரமத மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 9 தனியாா் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு சேவை புரிந்துவருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 3 லட்சத்து 11 ஆயிரத்து 614 குடும்பங்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த 23,151 பயனாளிகளுக்கு ரூ. 32.60 கோடி செலவில் இந்தத் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர தனியாா் மருத்துவமனைகளில் முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் 365 பயனாளிகளுக்கு ரூ . 4 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது, காப்பீட்டு திட்ட விழிப்புணா்வு பதாகையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் , அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பாக சேவை புரிந்த காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் வாா்டு மேலாளா்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் முருகவேல், துணை இயக்குநா்கள் பொன் இசக்கி, பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் டி. நேரு, மாவட்ட காப்பீடு திட்ட அலுவலா் சுந்தரமூா்த்தி, மாவட்ட திட்ட அலுவலா் ஒருங்கிணைப்பாளா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com