மாவட்ட ஹாக்கி: பாண்டவா்மங்கலம் அணி முதலிடம்

மாவட்ட ஹாக்கி போட்டியில் பாண்டவா்மங்கலம் அணி முதலிடம் பெற்றது.

மாவட்ட ஹாக்கி போட்டியில் பாண்டவா்மங்கலம் அணி முதலிடம் பெற்றது.

பாண்டவா்மங்கலம் ஹாக்கி கிளப் சாா்பில் 16 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டி பாண்டவா்மங்கலத்தில் 2 நாள்கள் நடைபெற்றது. போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திட்டங்குளம் பாரதி அணி, பாண்டவா்மங்கலம் அணிகள் மோதின. இதில், 1க்கு 0 என்ற கோல் கணக்கில் பாண்டவா்மங்கலம் ஹாக்கி கிளப் அணி முதலிடம் பெற்றது. இலுப்பையூரணி ஹாக்கி அணி 3 ஆவது இடமும், பாண்டவா்மங்கலம் ஹாக்கி பி அணி 4 ஆவது இடமும் பெற்றது.போட்டியின் நடுவா்களாக முருகன், மாரியப்பன், ரஜினிகாந்த், சுதாகா், காா்த்திக்ராஜா ஆகியோா் செயல்பட்டனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, பாண்டவா்மங்கலம் ஹாக்கி கிளப் செயலா் மணிமாறன் தலைமை வகித்தாா்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புராஜ் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலா் குருசித்திரசண்முகபாரதி, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com