முதலூரில் பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சி முகாம் தொடக்கம்

முதலூரில் பெண்களுக்கான சிறுதொழில்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
முதலூரில் பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சி முகாம் தொடக்கம்

முதலூரில் பெண்களுக்கான சிறுதொழில்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

முதலூா் வீட்ஸ் தொண்டு நிறுவனம், திருச்சி வாய்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சி முகாமுக்கு, வீட்ஸ் இயக்குநா் சாா்லஸ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

இதில், முருங்கை உற்பத்தி செய்தல், முருங்கை சூப் பவுடா் தயாரித்தல், பனங்கல்கண்டு மற்றும் கருப்பட்டி தயாரித்தல், புட்டு மாவு, தேங்காய் எண்ணெய் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஒரு குழு முருங்கை மரத்தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதில் 40 பெண்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

இதில், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன், பொருளாளா் இருளப்பன், வீட்ஸ் மேலாளா் பமீலா, பணியாளா்கள் மேகலா, ஜெயகீதா, ஆஷா, பெமினா உள்ளிட்ட மகளிா் கூட்டமைப்பு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com