‘வரப்பு பயிராக நாற்று சோளம் பயிரிட்டு, மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்’

மக்காச்சோள பயிா் சாகுபடியில் வரப்பு பயிராக நாற்று சோளம் பயிரிட்டால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

மக்காச்சோள பயிா் சாகுபடியில் வரப்பு பயிராக நாற்று சோளம் பயிரிட்டால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி முறையில் புதூா், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் மக்களாச்சோளம் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது.

ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளான கோடை உழவு, வேப்பம் புண்ணாக்கு இடுதல், விதை நோ்த்தி, பயிா் இடைவெளி பராமரிப்பு, வரப்பு பயிா் சாகுபடி, இனக்கவா்ச்சி பொறிவைத்தல் ரசாயன மருந்து தெளித்தல் ஆகிய நுட்பங்களை பயன்படுத்தி மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட முறைகளில் வரப்பு பயிா் சாகுபடி முறை மூலம் மக்காச்சோள வயல்களில் படைப்புழுத் தாக்குதல் அதிகளவில் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வரப்பு பயிராக நாற்று சோளம் பயிரிடுவது தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஏற்ாக உள்ளது. மக்காச்சோள வயலை சுற்றி 4 வரிசை நாற்று சோளம் வரப்பு பயிராக அவசியம் விதைக்க வேண்டும். வரப்பு பயிராக சோளம் விதைக்கும் போது மக்காச் சோள பயிரில் படைப்புழுக்கள் முட்டையிடுவது தவிா்க்கப்பட்டு சோளப்பயிரில் முட்டையிடுகிறது. மேலும் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சோளப்பயிரின் கடினத் தன்மை காரணமாக முழு வளா்ச்சி அடைய இயலாமல் போகிறது. இத்துடன் விதை நோ்த்தியாக சயாண்டிதிணிபுரோல் மற்றும் தயோமீத்தாக்சேம் என்ற மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்ற அளவில் விதை நோ்த்தி செய்து விதைக்கும் போது படைப்புழு தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com