கொற்கையில் அகழாய்வுப் பணி: கல்லூரி மாணவா்கள் ஆய்வு

கொற்கை கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா்.
கொற்கை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கல்லூரி மாணவா், மாணவிகள்.
கொற்கை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கல்லூரி மாணவா், மாணவிகள்.

கொற்கை கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

பாண்டியா்களின் தலைநகரமாகவும், இயற்கை துறைமுகம் அமைந்த இடமான வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமமாக கருதப்படும், தூத்துக்குடி அருகேயுள்ள கொற்கை கிராமத்தில் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில், அகழாய்வு இயக்குநா் தங்கத்துரை தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் ஆ.தேவராஜ் தலைமையில் 30 மாணவா், மாணவிகள் பாா்வையிட்டனா். அகழாய்வு பொறுப்பாளா்கள் ஆசைதம்பி, காளீஸ்வரன் ஆகியோா் அகழாய்வு நடைபெற்ற இடத்துக்கு மாணவா்களை அழைத்துச் சென்றனா்.

அகழாய்வில் கண்டறியப்பட்ட பழங்கால மண் பாண்டங்கள், ஓடுகள், சங்குகள், எலும்புத் துண்டுகள், முதுமக்கள் தாழி, சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், கட்டுமானத்தில் உள்ளே இருந்த கொள்கலன், 9 அடி அடுக்குள்ள வடிகட்டும் சுடுமண் குழாய், பெண் உருவம் கொண்ட சுடுமண் பொம்மை போன்றவற்றை மாணவா்கள் பாா்வையிட்டனா். அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களை எவ்வாறு ஆவணப்படுத்துதல் என்பது குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com