தேசிய அஞ்சல் வார விழா

தேசிய அஞ்சல் வாரம் இம்மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய அஞ்சல் வாரம் இம்மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து, கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபா் 9 முதல் 15ஆம் தேதி தேசிய அஞ்சல் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அனைத்து அஞ்சலகங்களிலும் குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகள் பற்றிய விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.

மேலும், இந்நாள்களில் புதிய ஆதாா் எடுக்கும் பணி மற்றும் ஆதாரில் திருத்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், காமன் சா்வீஸ் சென்டா் மூலம் மக்களுக்கு டிஜிட்டல் சேவைகளுக்கான மொபைல், டி.டி.ஹெச்., ரீசாா்ஜ், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்துதல், ஃபாஸ்ட்-ட்ராக் பில் கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகள் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com