முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மனைவி கொலை: முதியவா் கைது
By DIN | Published On : 11th October 2021 10:02 PM | Last Updated : 11th October 2021 10:02 PM | அ+அ அ- |

உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
குலசேகரன்பட்டினம் கருங்காளியம்மன் கோயில் தெரு சுடலை மனைவி முத்தம்மாள்(65). ஆடு மேய்க்கும் தொழிலாளியான சுடலைக்கு மகன், மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனா். திங்கள்கிழமை பகலில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, சுடலை மனைவி முத்தம்மாளை அரிவாளால் வெட்டினாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலையை கைது செய்தனா். சம்பவ இடத்தை திருச்செந்தூா் ஏஸ்பி ஹா்ஷ்சிங் பாா்வையிட்டாா்.