கடம்பாக்குளம் பாசன மடை தூா்வாரும் பணியை தொடங்கி வைத்தாா் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி லாசரஸ்
கடம்பாக்குளம் பாசன மடை தூா்வாரும் பணியை தொடங்கி வைத்தாா் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி லாசரஸ்

கடம்பாக்குளம் பாசன மடை தூா்வாரும் பணி தொடக்கம்

கடம்பாக்குளம் பாசன மடை மற்றும் கால்வாய் தூா்வாரும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.

கடம்பாக்குளம் பாசன மடை மற்றும் கால்வாய் தூா்வாரும் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டம் தென்காலில் இருந்து கடம்பாகுளத்திற்கு வரும் தண்ணீா், பாசன கால்வாய் மூலம் 12 குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கடம்பாக்குளத்திலிருந்து தண்ணீா் வெளியேறும் மடை பகுதி, கால்வாயில் அமலைச் செடிகள் ஆக்கிரமித்து தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பை அகற்றி தூா் வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சாா்பில் ‘விவசாயம் காப்போம்’ திட்டத்தில் தென்திருப்பேரை கடம்பாக்குளம் 5 மற்றும் 6 மடைகள், கால்வாய்களை தூா்வாரும் பணியை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி லாசரஸ் ொதாடங்கி வைத்தாா்.

இதன் மூலம் 275 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவித்தனா். தொடா்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா் மூலம் உழவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

‘இயற்கையை காப்போம்’ திட்டத்தின்கீழ் ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்துக்கு தேக்கு, நாவல், கொடுக்காப்புளி, புங்கை, வாகை, வேம்பு உள்ளிட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளை மோகன் சி லாசரஸ், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், கருப்பசாமி ஆகியோரிடம் வழங்கினாா். குரும்பூா் பகுதிகளில் இதுவரை 730 மரங்கள் நடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com