முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
உடன்குடியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 11th October 2021 12:48 AM | Last Updated : 11th October 2021 12:48 AM | அ+அ அ- |

முகாமில் பேசுகிறாா் சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும் சாா்பு நீதிபதியுமான பி.வி.வஷீத்குமாா்.
உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமை திருச்செந்தூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான பி.வி.வஷித்குமாா், தொடங்கி வைத்து, கிராம மக்களுக்கு சட்டப் பணிகள் குழுவின் சேவைகள், முதியோா், பெண்களுக்கான சட்டங்கள் குறித்துப் பேசினாா். மேலும் தொழிலாளா்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் மோகனசுந்தரம், பள்ளித் தலைமையாசிரியா் ஜெபசிங்மனுவேல், வழக்குரைஞா்கள் சாத்ராக், ஜேசுராஜ்,பிரிதிவிராஜா, எட்வா்ட், துா்கா செல்வி, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உதவியாளா் அருள்மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.