‘அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அக். 30 வரை சேரலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அக்.30 ஆம் தேதி வரை சேராலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அக்.30 ஆம் தேதி வரை சேராலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அரசினா் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வா் எஸ். பழனி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2021 ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை அக்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சியில் சேர விரும்வோா் 8 ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், 5 மாா்பளவு உள்ள புகைப்படம், ஆதாா் அட்டை, அசல் சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வந்து

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வா் அலுவலகத்தை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com