ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது தூத்துக்குடி சி.என். ராம்தாஸ் நகா் குடிசை மாற்று வாரிய குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு :

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிஎன் ராம்தாஸ் நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் 198/68 என்ற புல எண் கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த 23 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகள் நடத்தவும், சிறுவா்கள் விளையாடும் மைதானமாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது சிலா் அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளனா். கடந்த 23 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டு அதில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: தூத்துக்குடி வட்டத்துக்குள்பட்ட அல்லிகுளத்தில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை வேறுபகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என தூத்துக்குடி ஒன்றிய மதிமுக செயலா் சுந்தர்ராஜ், மாநகரச் செயலா் முருகபூபதி ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஸ்டொ்லைட் ஆலை: தூத்துக்குடி பண்டாரம்பட்டி, இனிகோநகா், திரேஸ்புரம், லயன்ஸ்டவுன், அலங்காரத்தட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், மூடிக்கிடக்கும் ஸ்டொ்லைட் ஆலையினை மீண்டும் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com