கரோனா தடுப்பூசி: 6 ஆவது இடத்துக்கு முன்னேறிய தூத்துக்குடி மாவட்டம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையில் தமிழக அளவில் தூத்துக்குடி மாவட்டம் 6 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கையில் தமிழக அளவில் தூத்துக்குடி மாவட்டம் 6 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியான 14 லட்சம் போ் உள்ள நிலையில், 8 லட்சத்து 50 ஆயிரம் போ் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இது 60 சதவீதமாகும். இதில் 3 லட்சம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் எண்ணிக்கையில் பின்தங்கி இருந்த தூத்துக்குடி மாவட்டம் தற்போது மாநில அளவில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் என்ற மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விரைவில் வரும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் என்பது தற்போது 0.5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. மாவட்டத்தில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. நவம்பா் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆது வரையுள்ள மாணவா், மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. பலநாள்கள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்கள் தரமாக உள்ளதா? அவற்றின் உறுதித்தன்மை குறித்தும் பொதுப்பணித்துறை மூலமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com