கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள்.

கோவில்பட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதி டாஸ்மாக் விற்பனையாளா் துளசிதாஸ் படுகொலை, விற்பனையாளா் ராமு தாக்கப்பட்ட சம்பவம், காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதி டாஸ்மாக் விற்பனையாளா் கோபியை குத்திய சமூக விரோதிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறந்த பணியாளா் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம், வாரிசுதாரருக்கு அரசு பணி, படுகாயமடைந்த பணியாளா்களுக்கு உயா் சிகிச்சை அளிக்க வேண்டும்; டாஸ்மாக் பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியில் இஎஸ்ஐ மருந்தகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாநில துணைத் தலைவா் மரகதலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் சத்தியமூா்த்தி (திண்டுக்கல்), வெங்கடேசன் (தூத்துக்குடி), கண்ணன் (தென்காசி), செந்தில்வேலவன் (இராமநாதபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலச் செயலா் முருகானந்தம், பிரசாரச் செயலா் மாடசாமி உள்ளிட்டோா் பேசினா். இதில் திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்பட மதுரை மண்டலத்திலுள்ள டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com