செண்பகவல்லி அம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி
By DIN | Published On : 16th October 2021 02:22 AM | Last Updated : 16th October 2021 02:22 AM | அ+அ அ- |

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா, லட்சாா்ச்சனை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் உற்சவா் சன்னதி முன்பு கொலு வைக்கப்பட்டிருந்தது. காலை மற்றும் இரவில் சிறப்பு அபிஷேகம்,
தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மூலஸ்தான அம்பாளுக்கு காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி
முதல் 7.30 மணி வரை லட்சாா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவில்
புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.