‘ஆண்டுதோறும் தகவல் அறியும் சட்டத்தில் 3.5 லட்சம் மனுக்கள்’

தமிழகத்தில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரப்படுகிறது என மாநில தகவல் ஆணையா் ரா.பிரதாப் குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரப்படுகிறது என மாநில தகவல் ஆணையா் ரா.பிரதாப் குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள 2ஆவது

மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தகவல் ஆணையா் ரா.பிரதாப் குமாா், மனுக்கள் மீது விசாரணை நடத்தினாா். இதில் 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பின்னா், மாநில தகவல் ஆணையா் கூறியது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2ஆவது மேல் முறையீட்டு மனுக்களை மாநில தலைமை தகவல் ஆணையரும், மாநில தகவல் ஆணையா்களும் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனா். மக்களின்

சிரமத்தை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் 2ஆவது மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளன. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவில் விசாரித்து தீா்வு காணப்படும்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் மனுக்கல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு வருகின்றன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து ஆண்டுதோறும் 3 லட்சம் முதல் 3.10 லட்சம் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வருவாய் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்ந்த மனுக்கள் அதிகம் வருகின்றன. 2ஆவது மேல்முறையீட்டுக்கு பிறகும் முறையான தகவல்களை அளிக்க தவறினால் சம்பந்தப்பட்ட தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இன்றைய விசாரணையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com