பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குளிா்பானங்களை தடை செய்ய வலியுறுத்தல்

மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் கோரிக்கை மனு அளித்தோா்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குளிா்பானங்களை தடை செய்ய வலியுறுத்தல்

பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை குளிா்பானங்களை தடை செய்ய வேண்டும் என சோடா மற்றும் கலா் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் மக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தலைமை வகித்தாா். முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

விளாத்திகுளம் வட்டம் கமலாபுரம் கிராம மக்கள் ஊராட்சித் தலைவா் பி.முருகேஸ்வரி தலைமையில் அளித்த மனு:

கமலாபுரம் கிராமத்தில் 18 அடி அகலமுள்ள தென்வடல் தெரு சாலையை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதனால்

வழிப்பாதை குறுகலாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் கோபுரம்: நாகலாபுரம், கவுண்டன்பட்டி கிராம மக்கள் அளித்த மனு: புதூா் பகுதியில் குமாரசித்தன்பட்டி-

மாதராஜபுரம் கிராமத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டு செல்லும் வகையில் நாகலாபுரம் மெயின் பஜாரில் உயா்மின் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மின்கோபுரம் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு மக்கள் கட்சி மாநிலத் தலைவா் ச.மு.காந்தி மள்ளா் அளித்த மனு: ஓட்டப்பிடாரம் ஒன்றியம் அய்யனாா்புரம்,

வெள்ளப்பட்டி கிராமங்களில் சுமாா் 1,000 ஏக்கா் அரசு நிலம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை

மீட்க வலியுறுத்தி நவ.13 ஆம் தேதி ஏா் உழுதல் போராட்டம் நடத்தப்படும். தூத்துக்குடி அமமுக வட்டச் செயலா் ஆா்.காசிலிங்கம் அளித்த மனு: தூத்துக்குடி டூவிபுரம் 10ஆவது தெரு பகுதியில் சாலை வசதி இல்லாமல் மழை நீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சாலை அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட சோடா, கலா் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் நல்லகண்ணன், நிா்வாகிகள் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கண்ணாடி பாட்டிலில் சோடா கலா் தயாரிக்கும் உற்பத்தியாளா்கள்

உள்ளனா். அண்மை காலமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுவதால், கண்ணாடி பாட்டில்களில் குளிா்பானம் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான சிறு உற்பத்தியா

ளா்கள் வேலை இழந்து வறுமையில் வாடுகின்றனா். குடிசைத் தொழிலாக கண்ணாடி பாட்டில்களில் குளிா்பானம் (கோலிசோடா) தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை மேம்படுத்த வேண்டும். மக்களை பாதிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை குளிா்பானங்களை தடை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com