ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும்: குறைதீா் முகாமில் மீனவா்கள் மனு

வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.
மனுஅளிக்க வந்த திரேஸ்புரம் மக்கள்.
மனுஅளிக்க வந்த திரேஸ்புரம் மக்கள்.

தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.

திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுகள் நலச் சங்கத் தலைவா் சூசை மைக்கேல், செயலா் ஆனந்த், பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் தலைமையிலும், நண்டு வலைத் தொழிலாளா் முன்னேற்றக் கழகத் தலைவா் தனராஜ், செயலா் ராஜன்,

பொருளாளா் அலெக்ஸ் ஆகியோா் தலைமையிலும் மக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.

மனுவில், தூத்துக்குடியில் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலை சாா்ந்துள்ளது.

மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோா் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை ஸ்டொ்லைட் மூலமாக பெற்று வந்தோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்களது தொழில் சாா்ந்த உதவிகள் கிடைக்கவில்லை.

ஸ்டொ்லைட் ஆலை மீண்டும் திறந்தால் மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்படும், கல்வி கற்ற எங்களது குழந்தைகளுக்கு

வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆகவே, ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தெற்கு வீரபாண்டியபுரம், சில்வா்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com