தீபாவளி பாதுகாப்பு: தூத்துக்குடியில் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், இந்த கண்காணிப்பு கோபுரங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வாகன ரோந்துப் பணியையும் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய முக்கிய 4 இடங்களில் குற்றிச்செயல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு புறமும், அதாவது 360 டிகிரியில் கண்காணிக்கக்கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள 2 ரோந்து வாகனங்கள் மூலம் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் குற்றச் செயல்கள் நிகழாமல் கண்காணிப்பதோடு, கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி மக்களிடம் தொடா் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடைவீதிகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும்போது தங்களது உடமைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு தூத்துக்குடி நகரத்தில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீா் செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஆனந்தராஜன், ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் மயிலேறும்பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com