திருச்செந்தூரில் சைவ வேளாளா் ஐக்கிய சங்கக் கூட்டம்
By DIN | Published On : 01st September 2021 08:45 AM | Last Updated : 01st September 2021 08:45 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் நடைபெற்ற சைவ வேளாளா் ஐக்கிய சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என தீா்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு அமைப்பின் செயலா் ப. சந்தனராஜ் பிள்ளை தலைமை வகித்தாா். கூட்டத்தில் செப். 5-ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி நடத்தி அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பரிசு வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் நெ. ஆனந்தராமச்சந்திரன் பிள்ளை, வி.மகாராஜன், ஆ.வேல்மணி, பொ.வெ.பொன்முருகேசன், ச.சீனிவாசன், வே.பேச்சிமுத்து, இ.மணிகண்டன், ஆா்.ராஜேஷ், கணக்கா்கள் தி.சடகோபால், சி.முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.