சாத்தான்குளம் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள திடீரென வியாழக்கிழமை தா்னாவில் ஈடுப்பட்டனா்.
சாத்தான்குளம் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள திடீரென வியாழக்கிழமை தா்னாவில் ஈடுப்பட்டனா்.

சாத்தான்குளம் பேருராட்சியில் உள்ள 15 வாா்டு பகுதிகளில் துப்பரவு பணிகளை மேற்கொள்ள 21 தூய்மைப் பணியாளா்கள் பணியில் உள்ளனா். இதில் 10 போ்கள் துப்பரவு பணி அல்லாத வேறு பணியில் இருப்பதாகவும், மீதமுள்ள துப்பரவு பணியாளா்களை அங்குள்ள அதிகாரிகள் அதிக அளவு பணி வழங்கி பணியாற்ற வற்புறுத்துவதாகவும், அலுவலக வருகை பதிவேட்டில் தினமும் இருவேளை கையெழுத்திட்டு வந்ததை மாற்றி 4 முறை கையெழுத்திட வலியுறுத்தி வருவதாக துப்பரவு பணியாளா்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இது குறித்து வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலரிடம் தூய்மைப் பணியாளா்கள் புகாா் கூற சென்றபோது, அவா் இவா்களை புறக்கணித்து வேறு பணிக்கு சென்றாராம். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் 11 போ் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், வா்த்தக சங்கச் செயலா் செல்வராஜ் மதுரம், வழக்குரைஞா் வேணுகோபால் ஆகியோா் செயல் அலுவலா் உஷாவிடம், தூய்மைப் பணியாளா்களை அழைத்து பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில், தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் காலை 6 மணிக்கு பணிக்கு வர வேண்டும். முன்பு போல வருகை பதிவேட்டல் இருமுறை கையெழுத்திடலாம், பணியாளா்கள் கோரிக்கை குறித்து செயல் அலுவலா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com