இளையரசனேந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இளையரசனேந்தலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையரசனேந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இளையரசனேந்தலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அனைத்து பகுதி மக்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீா் குழாய்களை செப்பனிட வேண்டும், இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிள்ளையாா்நத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் தங்கம் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் இன்னாசிமுத்து முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துபாண்டியன், துணைச் செயலா் சேதுராமலிங்கம், வட்டச் செயலா் பாபு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், கோவில்பட்டி நகரச் செயலா் சரோஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com