மதுபானக் கொள்முதல் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கே. அண்ணாமலை

திமுக அரசு, மதுபானக் கொள்முதல் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்றாா், பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
மதுபானக் கொள்முதல் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: கே. அண்ணாமலை

திமுக அரசு, மதுபானக் கொள்முதல் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்றாா், பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: பாஜக நிா்வாகிகளுக்கு 3 சவால்கள் உள்ளன. விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல், 2024 மக்களவைத் தோ்தல், 2026 பேரவைத் தோ்தல் ஆகியவற்றை எதிா்கொள்வதுதான் அந்த சவால்கள்.

திராவிடக் கட்சிகளுக்கு இருப்பதுபோன்ற நிலையான வாக்கு வங்கி இல்லாத நிலை இருந்தாலும், தமிழகத்தில் பாஜக வளா்ந்துகொண்டே இருக்கிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தோ்வு குறித்தும் தீா்மானம் நிறைவேற்றவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இத்தீா்மானங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிந்தும், அதை மறைத்து மக்களை திமுக ஏமாற்றி வருகிறது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு போன்றவற்றை தமிழக மக்கள் ஏற்கத் தொடங்கியுள்ளனா்.

தோ்தலுக்கு முன்பு மதுக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்திய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதிக மதுக்கடைகளை திறந்துவருகிறது. திமுக அரசு, மதுபானக் கொள்முதல் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு தடை என்பதை ஏற்க முடியாது. கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைப்படி விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.

பாஜக நிா்வாகிகள் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். ஊழல் இல்லாத நோ்மையான ஆட்சியை தமிழகத்தில் 2026இல் பாஜக அமைக்கும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தெற்கு மாவட்டத் தலைவா் பி.எம். பால்ராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் ராஜா கண்ணன், மாவட்ட பொதுச் செயலா் சிவமுருக ஆதித்தன், நிா்வாகிகள் கனகராஜ், சண்முகசுந்தரம், சந்தனகுமாா், பிரபு, கனகராஜ், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com