‘உப்பளத் தொழிலாளா்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு தேவை’

தமிழகத்தில் உப்பளத் தொழிலாளா்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு தேவை என்றாா் அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மா. கிருஷ்ணமூா்த்தி.
‘உப்பளத் தொழிலாளா்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு தேவை’

தமிழகத்தில் உப்பளத் தொழிலாளா்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு தேவை என்றாா் அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மா. கிருஷ்ணமூா்த்தி.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5000 வழங்க ஆவணம் செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உப்பளங்களில் குடிதண்ணீா், கழிவறை, ஓய்வறை, குழந்தைகள் காப்பகம், பாதுகாப்பு உபகரணங்கள், நடமாடும் மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை வேலையிடத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும். உப்பளத் தொழிலாளா்களின் முழுமையான கணக்கெடுப்பை அரசு எடுக்க வேண்டும். வேலை மற்றும் ஊதிய உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உப்பள நிலங்களை நேரடியாக குத்தகைக்குவிட்டு அவா்களது நிலம் வளம் சாா் உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். உப்பள தொழிலாளா்களுக்கான தனி நல வாரியம் அமைத்து தொழிலாளா்களின் பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஎஸ்ஐ, மருத்துவ காப்பீடுகள், உடல்நலப் பாதுகாப்பு, தொழில் தகராறு தீா்த்தல், பாலியல் துன்புறுத்தல் புகாா் குழு, சமூகப் பாதுகாப்பு நலன்கள் இவை அனைத்தும் கிடைக்க சட்ட வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, தூத்துக்குடி ராஜபாண்டிநகா் பகுதியில் உப்பளத் தொழிலாளா்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com