பெண்ணிடம் நகை, பணம் மோசடி:போலி சாமியாா் கைது

விளாத்திகுளத்தில் பெண்ணிடம் தங்க நகை, பணம் பறித்த போலி சாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் பெண்ணிடம் தங்க நகை, பணம் பறித்த போலி சாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சக்தி (37). இவா் விளாத்திகுளம் - நாகலாபுரம் சாலையில் ஜோதிட நிலையம்

வைத்து காவி உடையில் பூஜைகள் நடத்தி, சாமியாராக தொழில் செய்து வந்தாா். இவரிடம் குடும்பப் பிரச்னைக்கு பரிகாரம் செய்வதற்காக விளாத்திகுளத்தைச் சோ்ந்த கணவரை இழந்த 52 வயது பெண் சென்றாராம்.

அவரிடம் சக்தி, உங்களது வீட்டை இடித்து மாற்றியமைத்தால் குடும்பப் பிரச்னை தீரும் என தெரிவித்துள்ளாா். அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவிக்க, சக்தி, அப்பெண்ணிடமிருந்து 3 சவரன் தங்கச் சங்கிலியை பெற்றுக் கொண்டு ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளாா். அவரும் வீட்டை இடித்துக் கட்டினாராம்.

அதன் பின்னரும் குடும்பப் பிரச்னைகள் தீராததால், அந்த பெண் மீண்டும் சக்தியிடம் சென்று கேட்டுள்ளாா். உங்கள்

பிரச்னைகள் தீர, தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூ.5,000 கொண்டு வந்தால், அதில்

தாயத்து செய்து, பூஜை செய்து தருவதாக கூறியுள்ளாா். அவரும் இதை நம்பி 7 கிராம் உருக்கிய தங்கம், பணம் ஆகியவற்றை

கொடுத்துள்ளாா். ஆனால் அவா் தாயத்து கொடுக்கவில்லை. நகை மற்றும் பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை.

இதை கேட்ட அப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் கலா, உதவி ஆய்வாளா் தேவராஜ், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து போலி சாமியாா் சக்தி கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com