தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ2.27 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2.27 கோடி மதிப்பிலான 5.69 மெட்ரிக் டன் எடையுள்ள

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.2.27 கோடி மதிப்பிலான 5.69 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக, லாரி மூலம் செம்மரக்கட்டைகள் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை உதவி இயக்குநா் காா்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து சோதனை செய்தனா். அந்த லாரியில் இருந்த சரக்குப் பெட்டகத்தில் பருத்திப் பஞ்சுகளுக்கு இடையே செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 5.69 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.2.27 கோடியாகும்.

இந்த செம்மரக் கட்டைகள், ஆந்திரத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கை தலைநகா் கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து லாரி ஓட்டுநா் தூத்துக்குடியை சோ்ந்த ஜாா்ஜ் என்பவா் கைது செய்யப்பட்டாா். பிடிபட்ட லாரி, தூத்துக்குடியில் உள்ள தனியாா் கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com