தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம்

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியன சாா்பில்,
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் கனிமொழி எம்.பி.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்குகிறாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியன சாா்பில், மாற்றுத் திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீடு முகாம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கூடுதல் ஆட்சியருமான சரவணன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ முன்னிலை வகித்தாா். கனிமொழி எம்.பி. முகாமை தொடங்கிவைத்தாா்.

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் 3 மாற்றத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 2 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் என மொத்தம் ரூ.5.30 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com