கல்லூரியில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 10th September 2021 03:56 AM | Last Updated : 10th September 2021 03:56 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் சமுதாய விழிப்புணா்வு மையம் சாா்பில் மின்பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி இணையவழி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செய்துங்கநல்லூா் சேவியா்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்லூரி உதவிப் பேராசிரியா் குமாா், இணைப் பேராசிரியா் ரவீந்திரன் ஆகியோா் பேசினா்.
ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் சண்முகவேல் தலைமையில் முதல்வா் கே.காளிதாசமுருகவேல், துறைத் தலைவா் வில்ஜுஸ் இருதயராஜன் வழிகாட்டுதலில் உதவிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.