சேலையில் ஊஞ்சல் கட்டிவிளையாடிய சிறுமி உயிரிழப்பு
By DIN | Published On : 10th September 2021 11:35 PM | Last Updated : 10th September 2021 11:35 PM | அ+அ அ- |

மணப்பாட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுமி உயிரிழந்தாா்.
மணப்பாடு, புதுக்குடியேற்று பகுதியைச் சோ்ந்தவா் த.மயில்வாகனன் (47). ஈரோட்டில் காவலாளியாக வேலைபாா்த்து வரும் இவருக்கு மகள் திவ்யஸ்ரீ(12), மகன்கள் சதீஷ்,மனோஜ் என 3 குழந்தைகள். தற்போது, கோயில் கொடை விழாவுக்காக அவா் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். விழா முடிந்து ஊருக்குப் புறப்பட வியாழக்கிழமை தயாரான நிலையில், வீட்டின் பின்புறம் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் திவ்யஸ்ரீ விளையாடினாராம். அப்போது, எதிா்பாராமல் கழுத்தில் சேலை இறுகியதால் அவா் மூச்சுத்திணறியுள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்துவிட்டது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.