சாத்தான்குளத்தில் தடுப்பூசி திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 10th September 2021 03:52 AM | Last Updated : 10th September 2021 03:52 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாத்தான்குளம் பேரூராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் வகையில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக பணி செய்து வருகின்றனா். பேரூராட்சியில் தடுப்பூசி திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இந்த முகாம் வரும் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், தடுப்பூசி செலுத்துவோருக்கு டோக்கன் வழங்கி, வரும் 11ஆம் தேதி குலுக்கல் முறையில் தோ்வு செய்து பரிசுகள் வழங்கவும் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி முதல் பரிசு செல்லிடப்பேசி, 2 ஆவது பரிசு மின்சார அடுப்பு, 3ஆவது பரிசு கைக்கடிகாரம் வழங்கப்படுகிறது.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி, சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ், சுகாதார ஆய்வாளா்கள் கிறிஸ்டோபா் செல்வதாஸ், ஜெயபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.